என்னுடைய முதல் பதிவு என்னை எப்போதுமே உற்சாகப்படுத்தும் ஒரு களம்/துறை பற்றியது.
விண்வெளி பயணம்.
எல்லைகள் தெரியாத இந்த அகண்ட பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் நம்முடைய பூமிப்பந்து. அதில் பலகோடி உயிரின வகைகளில் ஒன்றான மனித உயிரின் இருப்பின் காலத்தை நீட்டிக்க நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்த விண்வெளி பயணம், அதைத்தொடர்ந்து இன்னும் பிற கோள்களில் குடியேறுவது. நம்முடைய வாழ்நாளில் இது நடக்கப்போவது இல்லை. ஆனால் நம் பிள்ளைகள் அல்லது அவர்கள் பிள்ளைகளுக்கு இந்த பூமியில் இடமோ வளமோ போதாது. இதை இன்றிலிருந்தே தொடங்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதில் பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம். '“இயற்கையை பாதுகாத்து பூமிப்பந்தை நல்ல வாழ்விடமாக மாற்றி….” இது எல்லாமே சாத்தியம் ஆனால் போதாது. இது பற்றி விளக்கமாக இன்னுமொரு பதிவில் எழுதிகிறேன். நிற்க.
#இன்ஸ்பிரேசன்4 #inspiration4
ஹேய்லி ஆர்செனாக்ஸ், ஜெரார்ட் ஐசக்மேன், சியான் ப்ரோக்டார், க்ரிஸ் செம்ப்ரோஸ்கி இந்த நாலு பேரும் 3 நாள் ஸ்பேஸ் எக்ஸ் (spaceX) நிறுவனத்தோட space tourism போயிட்டு திரும்பி வந்திருக்காங்க.
கொஞ்சநாளைக்கு முன்னாடி விர்ஜின் கேளக்டிக் (virgin galactic) மற்றும் புலு ஆரிஜின் (blue origin) ஆகிய இந்த இரண்டு கம்பனிகளும் இன்னிக்கு நடக்கும் தனியாருக்கான space raceஐ ஆரம்பிச்சு வைத்தார்கள். அரசு விண்வெளி நிறுவனங்களை பொருத்தவரை பூமியின் தரையிலேந்து ~80 கி.மீ (50 மைல்) தொலைவிலே விண்வெளி தொடங்குது. விர்ஜின் கேளக்டின் சுமார் 90 கி.மீ தூரத்துக்கு பறந்தாங்க, புலு ஆரிஜின் 100 கி.மீ வரை போயிட்டு வந்தாங்க. இந்த ரெண்டுமே விண்வெளின்னு சொல்ல எவ்வளவு தூரம் வேணுமோ அந்த தூரம் மட்டும் போனாங்க. இந்த ரெண்டு கம்பனிகளின் மொத்த பயன நேரமே சில மணி நேரங்கள் தான், விண்வெளியில இருந்த நேரம் அப்படீன்னு பார்த்தா ஒரு சில நிமிடங்கள் மட்டுமே. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் வேற லெவல்.
ஸ்பேஸ் எக்ஸோட CEO இலான் மஸ்க் (Elon Musk), யாராவது 8ட்டடி பாஞ்சா அந்த விஷயத்துல 80 அல்லது 800 அடி பாயறத வழக்கமா வெச்சுகிட்டிருக்கிற ஒரு அசகாய சூரன். மனிதர்கள் பூமியில மட்டும் வாழ்ந்துகிட்டிருந்தா டைனோசர்கள் போல ஏதோ ஒரு காலத்தில் ஒரு எரிகல்லோ அல்லது வேறு இயற்கை அழிவினாலேயோ முழுசா அழிஞ்சு போயிடலாம். அதனால மனித சமூகம் அழிவிலேந்து காத்துக்கனும்னா அதுக்கு ஒரே வழி மனிதம் பூமியை கடந்து பரந்து விரிந்திருக்கும் விண்வெளியை ஆக்கிரமிக்கறதுதான் அப்படீன்னு முழுசா நம்பராரு. அதனுடைய முதல் படிதான் இந்த பயணம்னும் சொல்லலாம். இன்ஸ்பிரேசன்4 குழு போன தூரம் 580 கி.மீ. விண்வெளியில செலவழிச்ச நேரம் கிட்டதட்ட 3 நாள். இந்த தூரம் பூமியை சுற்றிகிட்டிருக்கிற அனைத்துலக விண்வெளி நிலையத்த (international space station) விட 150 கி.மீ அதிகம். விண்வெளி சுற்றுலா அப்படீன்னா இதுதான்னு காமிச்சிருக்காங்க ஸ்பேஸ் எக்ஸ். இன்ஸ்பிரேசஷன்4 மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் குழுவுக்கு kudos 👋.


இதில எனக்கொரு எக்சைட்மெண்ட் என்னன்னா, நான் தமிழ்நாட்டிலிருந்து படிச்சு வெளிநாடுகளுக்கு வந்து படிக்கிற காலங்களில் என்னோட அம்மா அப்பாவெல்லாரையும் வெளிநாடுகளுக்கு அழைத்து சுற்றி காட்டியிருக்கிறேன். அடுத்த தலைமுறை, அவர்கள் காலத்தில் விண்வெளி சுற்றுலா இன்னிக்கு வெளிநாடு சுற்றுலா போல ஆகிவிடும்ங்கறது என்னோட கணவு. என்னுடைய பிள்ளைகளே கூட அவர்கள் பெரிதானதும் என்னையெல்லாம் விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வார்கள் அப்படீன்னு ஒரு சின்ன நப்பாசைதான் 😅.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். ❤️