Hi, hello, வணக்கம்,
நலமாக இருக்கீங்களா? கோவிட் காலத்தில் பல கட்ட lockdownகள கடந்து நிறைய மாற்றங்களுக்குள்ளே ஒரு புது இயல்புக்குள்ள பயனிச்சிகிட்டிருகோம். இந்த சர்வதேச நோய் பரவல் (pandamic), வேலை, குடும்பம், குழந்தைகள்னு கடிவாலம் கட்டிகிட்டு ஓடிகிட்டிருந்த நான் உட்பட பலரையும் ஒரு sudden break போட்டு நிறுத்தி கடந்து வந்த பல நண்பர்கள் சுற்றத்தார்னு எல்லாறையும் நினைச்சு பார்க்க வெச்சு இருக்கு. zoom, google meetனு குடும்பத்தார் கூடவும் பழைய நட்புகள் கூடவும் reconnect பன்ன நல்ல வாய்ப்பு கொடுத்தது. Hi, எல்லாம் எப்படி இருக்கீங்க, நாங்களும் நல்லாருக்கோம்னு பேசிகிட்டிருந்தது போய் கொஞ்சம் அர்த்தமா பேசிக்க முடிஞ்சதா நினைக்கறேன். நாமெல்லாம் என்ன பன்றோம்னு ஒரு புது நிதர்சனம் அல்லது ஒரு புது perspective கிடைச்சதாவும் நினைக்கிறேன்.
இந்த காரணங்களான்னு தெரியாது, ஆனா பல வருடங்கள் கழித்து தொடர்ந்து எழுதவேண்டும் என்ற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே மனதில் தோணிகிட்டே இருந்துகிட்டிருக்கு. நேரமில்லைன்னு காரணம் சொல்லி தட்டி கழிச்சிகிட்டேதான் இருந்தேன். ஆனாலும் இந்த முறை பட்சி கொஞ்சம் பலமாகவே சொல்லிகிட்டிருக்கறதால சரி எழுதலாம்னு ஆரம்பிக்கிறேன். Blog, facebook இதிலெல்லாம் அப்பபோ ஆடிக்கு ஒரு தடவ எழுதினாலும் இந்த தடவ செய்திமடல் (newsletter) அப்படீங்கற தளத்துல முதல் முறையா பயனிச்சு பாக்கலாம்னு ஆரம்பிக்கிறேன்?
என்ன எழுத போறேன்?
தெரியல. முழுசா எதுவும் யோசிக்கவும் இல்ல. அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் இதை சுத்திதான் எப்பவும் என் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கிட்டிருக்கும். அதுதான் இங்கயும் முதன்மையா வளம்வரும்னு நினைக்கறேன்.
செய்திமடல்
இந்த செய்திமடல் வாரம் ஒரு முறை எழுதனும்னு நினைச்சு ஆரம்பிக்கிறேன். குறைந்தபட்சம் மாதம் இருமுறையாவது எழுதுவேண்ணு எதிர்பார்க்கிறேன். இது உங்க மின்னஞ்சலுக்கு நேரா வரும். அது தவிர facebookக்கிலும் பகிர்வேன். முடிந்தவரை 3-5 நிமிடத்துக்குள்ள படித்து முடித்துவிடும் அளவுதான் எழுதுவேன்.
முக்கியமா…
இங்க நான் எழுதற விஷயங்கள் பெரிசா உங்களுக்கு ஆர்வமில்லைன்னா எப்ப வேணும்னாலும் unsubscribe செய்துகொள்ளுங்க. பிடிச்சிருந்ததுன்னா எனக்கு ஒரு வரி எழுதுங்க. ஒத்த ஆர்வம் இருக்கிறவங்களுக்கு பகிருங்க. என்ன பாதிக்கும் பல சங்கதிகள இங்க உங்களுடைய இன்பாக்ஸில் வந்து உரையாட அனுமதிப்பதற்கு நன்றி.
தொடங்குகிறேன்…